உப்பிலியபுரம் அருகே 5 ஆடுகள் திருட்டு

X
உப்பிலியபுரத்தை அடுத்த கோணக்கரையை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் தொழுவத்தில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் நேற்று காலையில் சென்று பார்த்தபோது, 3 ஆடுகள் திருடு போனதை கண்டு ராஜசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதே போல் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ராஜ் என்பவ ரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 2 ஆடுகள் திருட்டு போனது. இது குறித்து தனித்தனியாக வந்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்மநபர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story

