நவீன சலவையகம் அமைக்க ரூ.5 லட்சம் மானியம் - ஆட்சியர் தகவல் 

நவீன சலவையகம் அமைக்க ரூ.5 லட்சம் மானியம் - ஆட்சியர் தகவல் 
X
ஆட்சித்தலைவர்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு, நிதியுதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றம் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 5 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக அமைத்து செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்திற்கு மிகாமலிருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story