ராமநாதபுரம் மாத்திரைகள் கடத்தல் 5 பேர் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்குகடத்தப்பட்ட ரூ.2.5 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் 5 பேர் கைது
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட வலிநிவாரணியாக பயன்படும் பேசாதை மாத்திரைகளை இலங்கை கடற்படையினர் கல்பிட்டி அருகேயுள்ள வெல்லமுண்டலம் கடல் பகுதியில் 3 பைபர் படகுகளை பறிமுதல் செய்து 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழகத்திலிருந்து இலங்கை மிக அருகில் இருப்பதால் தமிழக கடற்ரைப்பகுதியிலிருந்து போதைப்பொருட்கள், சமையல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதை மாத்திரை கடத்தி வருவதாக இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கல்பிட்டி பகுதியில் உள்ள வெல்லமுண்டலம் கடற்கரைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐந்து பைபர் படகுகளில் ஏற்றி வந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்த கடத்தி வந்தது தெரியவந்தது. மாத்திரைகளையும், மூன்று பைபர் படகுகளையும் பறிமுதல் செய்த கடற்படையினர். கல்பிட்டி, மோத்துவாரம், குரக்கன்ேஹன, வன்னிமுண்டலம், சின்னக்குடுரிப்பு பகுதிகளை சேர்ந்த 22, 44 வயதுடைய 5 பேரை கைது செய்தனர். இவர்களை சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் துறையின் சிறப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.2.5 கோடி, என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
Next Story