கோவை: இடைவிடாது 5 மணி நேரம் சிலம்பம், கராத்தே – நோபல் உலக சாதனை !

400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இடைவிடாமல் 5 மணி நேரம் 15 நிமிடங்கள் சிலம்பம் மற்றும் கராத்தே செய்து, நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
தற்காப்பு கலைகளில் புதிய வரலாற்றை படைத்துள்ளனர் கோவை மாணவர்கள். 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இடைவிடாமல் 5 மணி நேரம் 15 நிமிடங்கள் சிலம்பம் மற்றும் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் கராத்தே 'கடாஸ்' செய்து, நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை நிகழ்வு, கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பீடம்பள்ளியில் நடைபெற்றது. அதிதமிழன் வீர சிலம்பாட்டக் கலைக்கூடம் மற்றும் ஸ்ரீ சுக பிரம்மா மகரிஷி வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 11 வெவ்வேறு பாணிகளில் நடைபெற்ற சிலம்பம் நிகழ்வை, பள்ளியின் முதல்வர் திருமதி பிரபா D தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கராத்தே நிகழ்வில், 6 பாணிகளில் ‘கடாஸ்’ செய்து மாணவர்கள் புதிய சாதனையை எட்டினர். இந்த நிகழ்வை பள்ளியின் அறங்காவலர் மற்றும் இயக்குனர் அபி ராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகள் ட்ரோன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு, அதிகாரபூர்வமாக நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவால் அங்கீகரிக்கப்பட்டன. சாதனை நிகழ்வுக்காக பயிற்சியளித்த அசன் V. நாகசுந்தரம் சான்றிதழுடன் கவுரவிக்கப்பட்டார்.
Next Story