சேலத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

சேலத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 4 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் அந்தேரிப்பட்டியை சேர்ந்த சையது பாஷா (வயது 25), ஷானவாஸ், கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (54), சுகவனேஸ்வரன் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கிச்சிப்பாளையம் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா, ஒரு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அம்மாபேட்டையை சேர்ந்த தர்மலிங்கம் மகன் ஜீவானந்தம் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story