பர்கூர் அருகே எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திக்குப்பம் அடுத்த பாலிநாயனப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைபெற்றது. உறிய அனுமதியின்றி நடத்தபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் முத்தம்மாள் கந்திக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து, அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ்(40) மாதேஷ்(38) சரவணகுமார்(35) தம்பிதுரை(36) ராஜா(50) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

