கோவில்பாளையம் அருகே கார் மரத்தில் மோதி 5 மாணவர்கள் படுகாயம் !

X
கோவில்பாளையம் அருகே கோவை–சத்தி சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டிய நித்தின் கரு (22), சந்தோஷ்குமார் (20), ஆகாஷ்குமார் (22), கிஷோர் குமார் (22), இமயவரம்பன் ஆகிய 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

