பல்லடம் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு: 5 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மனு !

பல்லடம் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு: 5 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மனு !
X
புறவழிச்சாலை திட்டம் - எங்களது உயிரையும் கொடுப்போம் எனக் கூறும் பஞ்சாயத்து மக்கள்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் NH-81 புறவழிச் சாலை திட்டம் பல்லடம் பகுதியில் உள்ள செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பல்லடம், நாரணாபுரம், மதப்பூர் உள்ளிட்ட 5 வருவாய் கிராமங்கள் வழியாக 1.8 கி.மீ. தொலைவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், கோழிப்பண்ணைகள், கிணறுகள், தொழில்கள் என பல அமைப்புகளை பாதிக்கும் எனக் கூறி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் மனு அளித்து எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக பிளக்கார்டுகள் ஏந்தி முழக்கங்களுடன் போராட்டம் நடத்தினர்.vபொதுமக்கள், இந்த சாலை ஊர்களுக்குள் 5 கி.மீ. வெளியே அமைக்க வேண்டும் எனவும், 2021ல் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட வழியே பயன்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர். அலுவலர்கள், மக்கள் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். ஆனால், மக்கள் திட்டம் ரத்து செய்யப்படாதால் எதிர்ப்பு தொடரும் என ஆவேசமாக கூறினர்.
Next Story