நெமிலி அருகே குடும்ப தகராறில் கத்தி வெட்டு-5 பேர் கைது!

X
நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 36). தனியார் கம்பெனி பஸ் டிரைவர். இவரது மனைவி ஜெயசித்ரா (27). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் புருஷோத்தமன் தனது மனைவி ஜெயசித்ராவு டன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஜெயசித்ரா அதே கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு புருஷோத்தமன் மனைவியை சந்திக்க தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, மனைவியை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயசித்ராவின் தந்தை தட்சணாமூர்த்தி, தங்கை கணவர் பிரசாந்த் (23),உறவினர்கள் செல்வராஜ் (67), விஜய் என்கிற உதயா (22),கோபாலகிருஷ்ணன் (32) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் இரவு நெல்வாய் கண்டிகை கிராமத் தில் உள்ள புருஷோத்தமன் வீட்டிற்கு சென்று கணவன்-மனைவி தகராறு குறித்து பேசினர். அப்போது கைகலப்பு ஏற் பட்டு புருஷோத்தமனை கத்தியால் தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டியதாக கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்ப வம் குறித்து நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி உள் ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரசாந்த், தட்சணா மூர்த்தி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
Next Story

