புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்

புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்
X
தக்கலை
குமரி மாவட்டம் தக்கலை  சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அந்த வகையில் தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர், தக்கலை போலீசார் உதவியுடன் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தக்கலை, இரவி புதூர்கடை, கோடியூர், கோழிப்போர் விளை  போன்ற இடங்களில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. சம்பந்தப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து, தலா ரூ.  25 ஆயிரம்  அபராதம் விதித்தனர்.
Next Story