அறுவை சிகிச்சைக்காக ரூ.5 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டு அட்டை வழங்கி ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊத்தங்கரை வட்டம், கல்லாவி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை வழங்குமாறு மனு அளித்ததின் அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக ரூ.5 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. நேற்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துனை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் ஆகியோர் உள்ளனர்.
Next Story

