தண்ணீர் தொட்டிக்குள் 5 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

X
திண்டுக்கல் வேடப்பட்டி அந்தோணியார் நகர் பகுதியில் சேர்ந்த சதீஷ் மகன் லக்சன்(5) குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த அந்தோணியார் கோவில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு லக்சனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சித்திக், சிறப்பு சார்பு ஆய்வாளர் வனராஜ் மற்றும் காவலர்கள் லக்சனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

