வத்திராயிருப்பு அருகே கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு....*

X
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு.... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமிபுரம் இமானுவேல் முடங்கித் தெருவை சேர்ந்தவர் வீரச்சாமி(40). இவரது மனைவி பஞ்சவர்ணம்(36). இருவரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களது மகன் கோடிஸ்வரன்(5) எல்.கே.ஜி படித்து வந்தார். இன்று தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், கோடீஸ்வரன் பாட்டியின் பராமரிப்பில் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த கோடீஸ்வரன் திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்தார். சிறுவனை உறவினர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து இறந்த சிறுவனின் தந்தை வீராசாமி கொடுத்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்: முதற்கட்ட விசாரணையில் கோடீஸ்வரன் வீட்டின் அருகே விளையாடும் போது கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்தாக உடன் விளையாடிய சிறுவர்கள் தெரிவித்து உள்ளனர்.பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும், என்றனர்.
Next Story

