வாலிபர் மூளைச்சாவு: 5 பேருக்கு மறுவாழ்வு !

வாலிபர் மூளைச்சாவு: 5 பேருக்கு மறுவாழ்வு !
X
திருப்பூர் இளைஞரின் உறுப்பு தானம் – பலர் உயிர் பிழைப்பு.
திருப்பூரைச் சேர்ந்த நவீன்குமார் (25) மூளைச்சாவுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்புதான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. கல்லீரல், சிறுநீரகங்கள் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கண்கள் தனியார் மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டன. இதன்மூலம் 5 நோயாளிகள் உயிர் பிழைத்துள்ளனர். கே.எம்.சி.எச். தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நவீன்குமார் குடும்பத்திற்கு நன்றி என நேற்று தெரிவித்துள்ளார்.
Next Story