குருபரப்பள்ளி: அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் குருபரப்பள்ளி அடுத்துள்ள பில்லனக்குப்பம் ஏரிக்கரை அருகே நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதியின்றி நடத்தியதாக குருபரப்பள்ளி போலீசார் எருது விடும் விழாவை ஏற்பாடு செய்த பில்லனக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30) பாலு (22) சுரேஷ் (37) பாலாஜி (29) பார்த்திபன் (37) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story

