திருச்செங்கோட்டை அடுத்த சின்னத்தம்பி பாளையம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவியான முதியவர்களை மயங்க செய்து ஒரு பவுன் நகை 5 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

X
Tiruchengode King 24x7 |12 Oct 2025 6:15 PM ISTமல்லசமுத்திரம் சின்னத்தம்பி பாளையம் பாப்பாங்காடு பகுதியில் வீட்டில் திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 81 வயது முதியவர் மற்றும் அவரது மனைவி மீது ஸ்பிரே அடித்து மயங்கச் செய்து வீட்டுக்குள் இருந்த ஒரு பவுன் மோதிரம் 5 ஆயிரம்கொள்ளை அடித்த மர்ம நபர்கள் மல்லசமுத்திரம்போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சின்னத்தம்பி பாளையம் பாப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து கவுண்டர் என்பவர் மகன் கிருஷ்ணன் 81 இவரது மனைவி பெரியம்மாள்76 நேற்று முன்தினம் இரவு வீட்டு திண்ணையில் கிருஷ்ணனும் அருகில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அவரது மனைவி பெரியம்மாளும் உறங்கிக் கொண்டிருந்த போது சுமார் 2 மணி அளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு விழித்து பார்த்த போது முகமூடி அணிந்த மூன்று பேர் நின்று கொண்டிருப்பதையும் திடீரென இவர்கள் முகத்தில் ஸ்பிரே ஒன்றை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மயக்கம் அடைந்த இருவரும் அடுத்த நாள் காலை 7:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது வீட்டின் மேஜை டிராயரில் இருந்த ஒரு பவுன் மோதிரமும் ரொக்கப்பனம் ரூபாய் 5 ஆயிரம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கிருஷ்ணன் மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் கிருஷ்ணன் 1967இல் ஒரு பவுன் ரூ நூறுக்கு விற்கும் போது இந்த மோதிரத்தை வாங்கியதாகவும் இதனை யாரோ களவாடி சென்று விட்டனர் என்றும் போலீசில் தெரிவித்துள்ளார்.
Next Story
