ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றிட 5 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கிய எம்.பி கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்ற பணிநியமனம் பெற்ற 5 நபர்களுக்கு ஆணையினை வழங்கினார்.இந்நிகழ்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேரடி நியமனம் மூலம் மோகனூர் ஒன்றியத்தில் இரவு காவலர் பணிக்கும், கொல்லிமலை, புதுச்சத்திரம், சேந்தமங்கலம் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர் பணிக்கும் என 5 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.இந்நிகழ்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)சு.வடிவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அ.பிரபாகனர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


