மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது, நாட்டுத்துப்பாக்கி, கார் உள்ளிட்டவைகள் பறிமுதல்
மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது, நாட்டுத்துப்பாக்கி, கார் உள்ளிட்டவைகள் பறிமுதல்
மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது, நாட்டுத்துப்பாக்கி, கார் உள்ளிட்டவைகள் பறிமுதல்
Tiruchirappalli (East) King 24x7 |12 Jan 2026 6:57 PM ISTமணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது, நாட்டுத்துப்பாக்கி, கார் உள்ளிட்டவைகள் பறிமுதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னை மர பண்ணையில் இன்று அதிகாலை கார் ஒன்று நின்றிருப்பதை அறிந்த வளநாடு போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது 5 பேர் காரில் வந்திருப்பதும், காரில் நாட்டுத்துப்பாக்கி, லைட்டுகள், வைப்ரேட்டர், மற்றும் இறந்த நிலையில் 3 மயில்கள், ஒரு மயில் குஞ்சு இருப்பதை அறிந்து அவர்கள் 5 பேரையும் பிடித்து மணப்பாறை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில் 5 பேரும் மயில்களை நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், கங்காளிப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி வயது 28, திருப்பதி வயது 22, அம்மன்குறிச்சி ஆலவயல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 25, கருமங்காடு பகுதியைச் சேர்ந்த பரத்குமார் வயது 21, சின்னபிச்சம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா வயது 25 என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, பாதரச சுண்டுகள், கார், டார்ச் லைட், 4 செல்போன்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Next Story


