பாஜகவினருக்கு மட்டும் 5 வாக்கும் மற்றவர்களுக்கு 1 வாக்கும், சிலருக்கு வாக்கே இல்லை என்ற நிலையை கொண்டுவந்துள்ளார்கள் இதனை முறியடிக்க வேண்டியது கடமை எம்பி பேட்டி

பாஜகவினருக்கு மட்டும் 5 வாக்கும் மற்றவர்களுக்கு 1 வாக்கும், சிலருக்கு வாக்கே இல்லை என்ற நிலையை கொண்டுவந்துள்ளார்கள் இதனை முறியடிக்க வேண்டியது கடமை எம்பி பேட்டி
X
பாஜகவினருக்கு மட்டும் 5 வாக்கும் மற்றவர்களுக்கு 1 வாக்கும், சிலருக்கு வாக்கே இல்லை என்ற நிலையை கொண்டுவந்துள்ளார்கள் இதனை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமை, என விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி...*
ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அம்பேத்கரின் அங்கீகாரம் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது பாஜகவினருக்கு மட்டும் 5 வாக்கும் மற்றவர்களுக்கு 1 வாக்கும், சிலருக்கு வாக்கே இல்லை என்ற நிலையை கொண்டுவந்துள்ளார்கள் இதனை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமை, என விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி... பிரிட்டீஸ் அரசிற்கு அடிமையாக இருந்தஆர்எஸ்எஸ் இந்தியாவிற்காக சேவை செய்தது என பிரதமர் கூறுவது சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை அவமதிக்கும் செயல் சுதந்திர தின விழாவில் ஆர். எஸ். எஸ் குறித்து பேசியது மன்னிக்க முடியாத தவறு கண்டிக்கத்தக்கது தீபாவளி பண்டிகைக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் கூறியிருப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.சிறுகுறு தொழில் மற்றும் விவசாயிகளை பாதுகாப்பது மோடியின் சிந்தனை அல்ல, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடமிருந்து அதானியை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான் அவரது சிந்தனையாக உள்ளது என்றார்.ஆளுநர் ரவி தனது நடு நிலைமையை இழந்துவிட்டார்ஆளுனர் மீது மக்கள் எதிர்ப்பு வந்துவிட்டால் அவரை மாற்றி விடுவார்கள் தமிழகத்தின் நன்மைக்காக எப்பொழுதுமே ஆளுநர் போராடுவதில்லை போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களை இரவு நேரத்தில் காவல் துறையினர் கைது செய்திருக்கக் கூடாது தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை மரியாதை இல்லாமல் செய்யும் வகையில் இரவில் கைது செய்து சென்னை மாநகர காவல் துறை மிகப்பெரிய தவறு செய்துள்ளது தூய்மை பணியாளர்கள் போராட்ட விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர்அதிமுக என்பது அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது அண்ணா திமுக என்று இருந்த அதிமுக தற்போது "அமித்ஷா அதிமுக"வாக மாறிவிட்டதுஅமித்ஷா அதிமுகவிலிருந்து ஒவ்வொருவரும் அவர்களது தாய் கழகத்திற்கு செல்கிறார்கள் அமித்ஷா அதிமுகவின் வெறும் பிரச்சாரமாக எடப்பாடி பழனிச்சாமி ஊர் ஊராக சென்று வருகிறார் அதிமுகவில் இன்று யார் இருப்பார்கள், நாளை யார் இல்லாமல் இருப்பார்கள் என்பது பெரிய கவலையாக உள்ளது.அமித்ஷா தலைமையிலான அதிமுக சிறப்பாக செல்வதாக எடப்பாடி பழனிச்சாமி நினைத்து கொண்டிருக்கிறார்கள் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அம்பேத்கரின் அங்கீகாரம் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது பாஜகவினருக்கு மட்டும் 5 வாக்கு மற்றவர்களுக்கு 1 வாக்கும், சிலருக்கு வாக்கே இல்லை என்ற நிலையை கொண்டு வந்துள்ளார்கள்இதனை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமை, இதற்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடுவோம் டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் கிடைக்காத வரை இதுபோன்ற முறைகேடு தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது, தமிழக முதல்வர் கவனமாக செயல்பட வேண்டும் என்றார் பேட்டி: மாணிக்கம் தாகூர் - பாராளுமன்ற உறுப்பினர் ( விருதுநகர்)
Next Story