மணவாசி சுங்கச்சாவடியில் ரூ.5 முதல் 15 வரை கட்டணம் குறைப்பு - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.
Karur King 24x7 |1 Sep 2024 9:29 AM GMT
மணவாசி சுங்கச்சாவடியில் ரூ.5 முதல் 15 வரை கட்டணம் குறைப்பு - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.
மணவாசி சுங்கச்சாவடியில் ரூ.5 முதல் 15 வரை கட்டணம் குறைப்பு - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி. கரூர் அருகே உள்ள மணவாசி சுங்கச்சாவடியில் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் குறைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்ணயித்ததால் குறைந்துள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தகவல். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசியில் TKTPL சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இங்கு செயல்படும் சுங்கச்சாவடியில் கட்டணங்கள் ரூ.5 முதல் 15 வரை குறைக்கப்பட்டுள்ளது. இலகு ரக 4 சக்கர வாகனங்களுக்கு இரு வழி செல்ல ரூ.90- இருந்த நிலையில் இன்று 85 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு இரு வழியில் சென்று வர 160 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் அவை 155 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து, லாரிகள் மாத கட்டணங்களுக்கு 15 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இவை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், புதிய கட்டண நிர்ணயம் தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்கச் சாவடி நிர்வாகத்திடம் கேட்ட போது, ஆண்டுக்கு ஒரு முறை கட்டண திருத்தம் செய்வது வழக்கமான நடைமுறை தான் என்றும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த முறை 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணத்தை குறைத்து நிர்ணயித்துள்ளதாகவும், இந்த கட்டணம் அடுத்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தனர். இந்த சுங்கச் சாவடி துவங்கப்பட்டதிலிருந்து இது வரை 3 முறை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இது போன்று பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சுங்க கட்டணம் குறைத்துள்ளதால் வாகன போட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story