ஒகேனக்கல்லில் 5-வது நாளாக 1500 கன அடியாக நீர் வரத்து நிடிப்பு
Dharmapuri King 24x7 |9 Jan 2025 3:02 AM GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கன அடியாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக நிடிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக தமிழக மற்றும் கர்நாடக பகுதிகளில் அமைந்துள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பொழியாததாலும் கர்நாடக மாநிலங்களில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படாமல் இருப்பதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக சரிந்து காணப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 9 இன்று காலை நிலவரப்படி தொடர்ந்து ஐந்தாவது நாளாக வினாடிக்கு 1500 கன அடி வீதம் நீர் வரத்து வந்து கொண்டுள்ளது என மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் தொடர்ந்து நீரின் அளவை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story