கிருஷ்ணகிரி: பஸ்சில் கடத்த முயன்ற 5 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி நகர போலீசார் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகம்படும்படி நின்ற 2 பேரை பிடித்து சோதனை செய்தனா். அவா்கள் இருவரும் 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையெடுத்து அவா்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லதீப் (48), அஜ்மீா்(40) என்பதும், ஜார்கண்ட்டிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ரயிலில் வந்து பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்தித் செல்வதும் தெரியவந்தது. இதை அடுத்து அவா்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைதுசெய்தனா்.
Next Story

