முதியோர் தம்பதியினரை கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேர் கைது

முதியோர் தம்பதியினரை கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேர் கைது
X
எரியோடு அருகே முதியோர் தம்பதியினரை கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேர் கைது
திண்டுக்கல், மாரம்பாடி ஊராட்சி கணக்கனூரை சேர்ந்த வேளாங்கண்ணி ஆரோக்கியம் - கேத்தரின் மேரி தம்பதியினர் தங்களது தோட்டத்து வீட்டில் இருந்தபோது கடந்த 19ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கட்டையால் தாக்கி 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றது தொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து வேடசந்தூர் DSP. பவித்ரா மேற்பார்வையில் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையான போலீசார் மற்றும் டிஎஸ்பி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அருண்குமார்(32), பிரபு(30) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story