பல்லடம் அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 சகோதரர்களில் ஒருவர் கைது - 4 பேர் தலைமறைவு.

X
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாக்கியராஜ்,பெரியசாமி,பெரியராஜ்,திருமலை ராஜ் மற்றும் பாக்கியநாதன்.சகோதரர்களான இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கணபதிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் கணபதிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் பாக்கியராஜின் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் இருந்து சொகுசு காரில் விற்பனைக்காக குட்கா வாங்கி வந்ததும் தெரிய வந்தது.தொடர்ந்து 200 கிலோ குட்கா மற்றும் இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார் பாக்கியராஜை கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள பெரியசாமி,பெரியராஜ்,திருமலை ராஜ்,பாக்கியநாதன் ஆகியோரை பல்லடம் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

