கஞ்சா வழக்கில் 5 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

X
சட்டத்துக்கு புறம்பாக 15 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் ரயிலடியில் 2023, அக்டோபர் 4 ஆம் தேதி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கஞ்சாவை அப்போதைய மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வி.சந்திரா கைப்பற்றினார். இது தொடர்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசை (28), செல்வராமர் (40), சசிகுமார் (36), சென்னையைச் சேர்ந்த கார்த்தி (29), பிரபு (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் விசாரித்து ஆசை, செல்வராமர், சசிகுமார், கார்த்தி, பிரபு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
Next Story

