வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ 6 லட்சம் ரொக்க பணம் திருட்டு. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
Thiruvarur King 24x7 |9 Jan 2025 3:58 PM GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ 6 லட்சம் ரொக்க பணம் திருட்டு . சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மேல வீதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சுப்பிரமணியன் தனது மனைவி பிரேமலதா அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இரவு தங்கள் கீழ் வீட்டின் கதவை பூட்டி விட்டு, மாடியில் உள்ள அறையில் சென்று இருவரும் படுத்து உறங்கி உள்ளனர். காலையில் எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, பீரோ , லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ 6 லட்சம் ரொக்க பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது . இதுகுறித்து மன்னார்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மன்னார்குடி துணை கண்காணிப்பாளர் பிரதீப் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து ,கைரேகை நிபுணர்கள் கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மன்னார்குடி முக்கிய வீதிகளில் ஒன்றும் மக்கள் அதிக நடமாட்டம் அதிகம் உள்ள மேலவீதியில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story