நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தூய்மை மற்றும் மதிப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 நட்சத்திரங்கள் பெற்ற பள்ளிகளில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தூய்மை பசுமை பள்ளிகள் திட்டம் சார்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் தூய்மை பசுமை பள்ளிகள் இணையதளத்தில் (Swachh Evam Harit Vidyalaya Rating (SHVR)) உள்ளீட்டு செய்யப்பட்டது. அவற்றிற்கு உட்கட்டமைப்பு சார்ந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட அளவில் 160 பள்ளிகள் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, வட்டார அளவிலான குழு நேரில் சென்று மறு மதிப்பீடு செய்ததில் 90 பள்ளிகள் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அப்பள்ளிகளில் இருந்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழு மூலம் நகர்ப்புற பகுதியில் 1 தொடக்கநிலை பள்ளி, 1 மேல்நிலைப் பள்ளி, ஊரகப்பகுதி பள்ளிகளில் 3 தொடக்கநிலை பள்ளிகள், 3 மேல்நிலைப்பள்ளிகள் என 8 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மேற்படி தேர்வு செய்யப்பட்ட நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தட்டான்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜம்புமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நஞ்சப்பகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிகளின் தலைமையாசியர்கள், நாமக்கல் நவோதயா சீனியர் செகண்டரி பள்ளி, எளையாம்பாளையம் விவேகானந்தா வித்யாபவன் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்களுக்கு மாவட்ட ஆட்சயொயர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ஆ.சு.எழிலரசி உட்பட மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு), மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


