சாத்தூரில் நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் ஓடிய 5 முதல் 80 வரை ஆர்வலர்கள்.....

சாத்தூரில் நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் ஓடிய 5 முதல் 80 வரை ஆர்வலர்கள்.....
சாத்தூரில் நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் ஓடிய 5 முதல் 80 வரை ஆர்வலர்கள்..... போதைப்பொருள் ஒழிப்பு, கேன்சர் தடுப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற மாரத்தானில் 1700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .... விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போதை பொருள் தடுப்பு மற்றும் கேன்சர் மற்றும் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த மராத்தான் ஓட்டப்பந்தயம் 5 கி.மீ மற்றும் 10 கி.மீ என இரு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த மராத்தான் ஒட்டத்தில் 5 வயது சிறுவர்கள் முதல் சுமார் 80 வயது முதியோர்கள் என சுமார் 1700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மராத்தான் போட்டி சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி மெயின் பஜார் வழியாக மேட்டுப்பட்டி வரை சென்று தனியார் கல்லூரியில் நிறைவு பெற்றது. மேலும் இந்த மாரத்தான் ஒட்ட பந்தயத்தை சாத்தூர் DSP நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த சிறப்பு மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு கேடயமும் வழங்கப்பட்டது.
Next Story