ஜிப்மருக்கு 50 கோடி நிதி குறைப்பு விழுப்புரம் எம்பி கண்டணம்
Villuppuram King 24x7 |27 July 2024 5:12 PM GMT
விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கண்டனம்
விழுப்புரம் எம்பி ரவிக்குமார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு 2023-24 இல் 1490.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 1307 கோடியை மட்டுமே மோடி அரசு விடுவித்தது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 183 கோடி ரூபாயைக் குறைத்துவிட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1440 கோடி ரூபாய் மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட 50 கோடி ரூபாய் குறைவாகும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கடந்த ஆண்டு 4134.67 கோடி ஒதுக்கினார்கள். அதை மேலும் 389 கோடி உயர்த்தி 4523 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜிப்மரைப் போலவே கட்டமைப்பு உள்ள சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்குக் கடந்த ஆண்டு 1923.10 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 277 கோடி அதிகரித்து 2200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜிப்மருக்கு 50 கோடி குறைத்திருக்கிறார்கள்.பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மருக்கு நிதி அதிகரிக்கும் என்றுதான் பாஜகவினர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஜிப்மரின் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் இந்த மருத்துவமனையால் பயனடைபவர்கள் தமிழர்கள் என்பதாலா? அல்லது ஜிப்மரின் பெயரில் ஜவஹர்லால் நேருவின் பெயர் இருப்பதாலா? ஜிப்மருக்கு நிதியை உயர்த்தி வழங்க மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சரும் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Next Story