மாயனூர் அருகே 50 அடி ஆழ கிணற்றில் குஞ்சுகளுடன் விழுந்த மயில். உயிருடன் மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்.
Karur King 24x7 |4 Aug 2024 9:11 AM GMT
மாயனூர் அருகே 50 அடி ஆழ கிணற்றில் குஞ்சுகளுடன் விழுந்த மயில். உயிருடன் மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்.
மாயனூர் அருகே 50 அடி ஆழ கிணற்றில் குஞ்சுகளுடன் விழுந்த மயில். உயிருடன் மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள். கரூர் மாவட்டம், மாயனூர் அருகே காட்டூர் என்ற ஊரில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. விவசாய பகுதி என்பதால் இப்பகுதிகளில் மயில்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மணிகண்டன் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மயில் ஒன்று தனது குஞ்சுகளுடன் விழுந்து விட்டதை கண்ட பகுதி பொதுமக்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், கரூர் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கயிற்றைக் கட்டி கிணற்றில் இறங்கி மயில் மற்றும் அதன் குஞ்சுகளை உயிருடன் மீட்டனர். பின்னர் மயில்களும் மயில் குஞ்சுகளும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். கிணற்றில் விழுந்த மயிலையும் அதன் குஞ்சுகளையும் மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story