பெயிண்ட் கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் தங்க நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை...

சங்ககிரி:பெயிண்ட் கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் தங்க நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை சங்ககிரி போலீசார் தீவிர விசாரணை....
சேலம் மாவட்டம் சங்ககிரியில் பூட்டியிருந்த பெயிண்ட் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 50 சவரன் தங்க நகை வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளோடு சிசிடிவி ஹார்ட்டிஸ்க்கையும் சேர்த்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு... சங்ககிரி பழைய எடப்பாடி சாலை மலையடிவாரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகநாதன் (67). இவர் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜம்மாள்(65) என்ற மனைவியும் லோகேஸ்வரன்(29 ) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் லோகேஸ்வரனுக்கு திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். ஜெகநாதன், ராஜம்மாள் தம்பதியர் தனது பேரக் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கடந்த வியாழக்கிழமை சென்னை சென்று விட்டு இன்று காலை சங்ககிரியிலுள்ள வீட்டிற்கு வந்த போது கதவுகள் திறக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சங்ககிரி போலீசார் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம்கோயல் நேரில் சென்று பார்வையிட்டு கைரேகை நிபுணர்கள் மற்றும் லில்லி மோப்பநாயை வரவழைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது ... மேலும் ஜெகநாதன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்கையையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் ஐந்து குழுக்கள் அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . சங்ககிரி நகர் பகுதியில் பெயிண்ட் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளோடு சிசிடிவி ஹார்ட்டிஸ்க்கையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story