கபிலர்மலையில் பொது சுகாதார மையக் கட்டிடம் அமைக்க ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை.

X
Paramathi Velur King 24x7 |5 Jan 2025 6:56 PM ISTகபிலர்மலையில் பொது சுகாதார மையக் கட்டிடம் அமைக்க ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜையை அமைச்சர் துவக்கி வைத்தார்.
பரமத்தி வேலூர், ஜன.05: பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலை அரசு மருத்துவமனை வளாகத்தில் 15-வது நிதிக்குழு (2024- 25) கீழ் வட்டார அளவிலான ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதாரம் மையக் கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினரும் நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் கே.கே.சண்முகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய,நகர, பேரூர் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
