விருதுநகரில் தீ விபத்து : 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

விருதுநகரில் தீ விபத்து : 50 ஆயிரம் மதிப்பிலான  பொருட்கள் எரிந்து நாசம்
X
விருதுநகரில் தீ விபத்து : 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
விருதுநகர் பரங்கிநாதபுரம் பகுதியைச் சார்ந்தவர் தர்மராஜ் வயது 61 இவர் விருதுநகரில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் வீட்டின் மாடியில் திடீரென்று இன்று மதியம் புகை மண்டலத்துடன் தீப்பிடி எரிந்ததாக கூறப்படுகிறது இது குறித்து அருகில் இருப்பவர்கள் தீயணைப்பு துறைக்கும் மேற்கு காவல் நிலைய போலீசார்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதை தொடர்ந்து அவர் வீட்டு மாடியில் வைக்கப்பட்டு இருந்த மரச்சாமான்கள் தீயில் எறிந்து நாசமாகினர் இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story