உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொண்ட வாக்கத்தான்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொண்ட வாக்கத்தான், போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் உடன் செல்பிக்கள் எடுத்துக்கொண்ட பெண் காவலர்கள்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொண்ட வாக்கத்தான், போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் உடன் செல்பிக்கள் எடுத்துக்கொண்ட பெண் காவலர்கள். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாக்கத்தான் நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் வாக்கத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் பெண் ஆய்வாளர்கள் உதவி பெண் ஆய்வாளர்கள் ஆயுதப்படை பெண் காவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மகளிர் உதவி எண், சைபர் கிரைம் குற்ற புகாரின் குழந்தைகள் பாதுகாப்பு அறையின் உள்ளிட்ட எண்கள் பதிக்கபட்ட டி-ஷர்ட் அணிந்து வாக்கத்தானில் கலந்து கொண்டனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பழைய டோல்கேட் வழியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மருத்துவக் கல்லூரி வழியாக மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை 2 கி.மீ.தூரம் நடைபெற்றது. வாக்கத்தானில் முதல் 3 இடங்களை பிடித்த மகளிர் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பதக்கம் மற்றும் ஷீல்ட்களை வழங்கி கௌரவித்தார். மகளிர் தினத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்தார் இவருடன் திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் தமிழரசி சைபர் கிரைம் AD எஸ்பி களியன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.வாக்கத்ரான் போட்டியில் கலந்து கொண்ட மகளிர் காவல் துறையினர் திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் தமிழரசியுடன் குழுவாக செல்பிக்கள் எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story