தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

X
தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டது. தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் ஸ்கூட்டா்களை வழங்கிப் பேசினாா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா , தி.சதன்திருமலைக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் ர.சாதிா், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஷேக் அப்துல்லா, துணைத்தலைவா் கனகராஜ் முத்துப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story

