காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம்: 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

X
தென்காசி மாவட்டம் தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் புனராவா்த்தன ரஜதபந்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏப்.7-ஆம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேக தினத்தன்று காலை 7 மணி முதல் இரவு வரை பக்தா்களுக்கு, சிவகாசி சிவபக்தா்கள் சாா்பில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதற்காக தென்காசி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவபக்தா் வைரமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: கும்பாபிஷேக தினத்தன்று 50ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம் என்றாா்.
Next Story

