கே.வி.குப்பத்தில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேட்டில் ஆட்டுச்சந்தை வெகு விமர்சையாக நடந்தது. இந்தச் சந்தையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 1 ஆடு ரூ.30,000 வரை விற்பனையானது. விற்பனை மந்தமாக இருந்ததாகவும், ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடந்தது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story

