மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50ஆயிரம் திருட்டு!

X
தூத்துக்குடியில் பூ மார்க்கெட் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அண்ணா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் மகன் திருப்பதி ராஜா (33), இவர் தூத்துக்குடி காமராஜர் காய்கறி மார்க்கெட் அருகே பூ மார்க்கெட் ரோட்டில் மளிகை கடை நடத்தி ரவுகிறார். நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை 4.30 மணிக்கு கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் ரோலிங் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.50ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுபோல் கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகில் உள்ள வஉசி மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகை கடையில் ரூ.4ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதனால் இரண்டு கடையிலும் திருடியது ஒரே கும்பல்கள் என்று முதற்கட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய மார்க்கெட் பகுதியில் நடந்த சம்பவம் கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

