சென்னையின் அடுத்த பிரம்மாண்ட பேருந்து நிலையம் 50 நாட்களில் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையின் அடுத்த பிரம்மாண்ட பேருந்து நிலையம் 50 நாட்களில் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
₹.427 கோடியில் சென்னையின் அடுத்த பிரம்மாண்ட பேருந்து நிலையம் 50 நாட்களில் திறக்க ஏற்பாடுகள் தீவிரம். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே அமைக்கப்பட்டு வரும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அடுத்த 50 நாட்களில் திறக்கப்பட உள்ளது. ₹427 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025ம் ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். 90 சதவிகிதம் இதன் கட்டுமானம் முடிந்துள்ளது. அழகுபடுத்தும் பணிகள், மின்சார இணைப்பு பணிகள் உட்பட 10 சதவிகித பணிகள் அங்கே நடந்து வருகின்றன. இது மட்டுமின்றி அம்பத்தூர் மற்றும் தொண்டயார்பேட்டை பேருந்து முனையங்களில் முறையே 57 மற்றும் 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். இதன் சீரமைப்புப் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. சென்னை முழுவதும் உள்ள ஒன்பது பெருநகர பேருந்து முனையங்கள் பயணிகள் பயணத்தை எளிதாக்கும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூவிருந்தவல்லியில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னை புறநகரில் உள்ளூர் அளவிலான இணைப்பை மேம்படுத்த பூவிருந்தவல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் இருந்து குத்தம்பாக்கத்திற்கு 150 பேருந்துகளை மாற்றி இணைப்பை மேம்படுத்தும். பூந்தமல்லி பணிமனையில் 120 மின்சார பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மேற்கு நோக்கிச் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் வேலூர் ராணிப்பேட்டை அரக்கோணம் திருத்தணி ஊத்துக்கோட்டை பள்ளிப்பட்டு ஆர்கே பேட்டை குடியாத்தம் கிருஷ்ணகிரி ஓசூர் திருப்பத்தூர் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலம் மைசூர் பெங்களூர் ஆந்திரா மாநிலம் திருப்பதி காளகஸ்தி பிச்சா ட் டூர் புத்தூர் நகரி செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்பட உள்ளது முதல் கட்டமாக பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது இங்கு பேருந்து பணிமனைகள் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் சைக்கிள் பைக் ஆட்டோ ஷேர் ஆட்டோ கார் பார்க்கிங் வசதி இரண்டு ஃபுட் கோர்ட்டுகள் மாநகரப் பேருந்துகள் நிற்கும் வசதி இங்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கழிவறை லிப்ட் வசதி பத்து நகரும் படிக்கட்டுகள் கடைகள் ஏடிஎம் வசதி என விமான நிலையத்திற்கு இணையாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் தயார் ஆகி வருகிறது மேலும் நசரத்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வழியாக சுங்குவார்சத்திரம் பரந்தூர் விமான நிலையம் வரை செயல்படுத்தப்பட உள்ளதால் பயணிகளுக்கு கூடுதல் வசதியாக இருக்கும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எதிர்காலத்தில் குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சாலை வசதிகளுடன் திருமழிசை திருவள்ளூர் திருப்பெரும்புதூருடன் இணைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெகுவாக குறையும் என்றும் மக்களுக்கு மிகவும் பயனளிக்க கூடிய பேருந்து நிலையமாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திகழும் என்று தெரிவித்துள்ளனர்
Next Story