கோவை: தனியார் நிறுவன ஊழியரிடம் 50 லட்சம் மோசடி !

X
ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி தனியார் நிறுவன ஊழியர் ஜோஜூ மேத்யூவிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கர்நாடகாவைச் சேர்ந்த சிவக்குமார், ஓசூரைச் சேர்ந்த குமரேசன் மற்றும் தனியார் வங்கி உதவி மேலாளர் நித்தியா ஆகியோர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 செல்போன்கள், 9 சிம் கார்டுகள், 25 ஏ.டி.எம் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகங்கள், 62 காசோலை புத்தகங்கள் உட்பட 129 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், மூவரும் சேர்ந்து நிறுவனம் நடத்தி வருவது போல் ஜோஜூ மேத்யூவை நம்ப வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. இவர்கள் வசூலித்த பணத்தை கம்போடியாவில் உள்ள நபருக்கு அனுப்பியதும், இதுவரை 90 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

