ராஜபாளையத்தில் மகாராஷ்டிராவின் மாநில விளையாட்டான அட்யா பட்யா என்ற கிளித்தட்டு போட்டி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொ

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மகாராஷ்டிராவின் மாநில விளையாட்டான அட்யா பட்யா என்ற கிளித்தட்டு போட்டி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள தனியார் உள் விளையாட்டு அரங்கில் மகாராஷ்டிரா மாநில பாரம்பரிய விளையாட்டான அட்யா பட்யா எனப்படும் கிளித்தட்டு விளையாட்டு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கோ கோ மற்றும் கபடி ஆகிய இரண்டு விளையாட்டுகள் இணைந்த இந்த விளையாட்டுக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. இந்த விளையாட்டு மூலம் மன பலமும் உடல் பலமும் அதிகரிக்கும். மேலும் அரசு அங்கீகாரம் உள்ளதால் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு மேல் படிப்பு படிக்கவும் அரசு வேலை வாய்ப்புக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

