கோவை: விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ.50 லட்சம் கொள்ளை

X
கோவையில் விடுதி உரிமையாளர் செல்லதுரையின் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லதுரை சென்னை எழும்பூரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். அவரது வீட்டில் அலங்கார வேலை செய்வதற்காக சுரேஷ் என்ற தொழிலாளி அனுமதிக்கப்பட்டிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து பார்த்த சுரேஷ், அதில் இருந்த நகை மற்றும் பணங்களை மூன்று ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக திருடியுள்ளார். மொத்தமாக 40 பவுன் நகை மற்றும் ரூ.21 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளன. செல்லதுரை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சுரேஷை சென்னையில் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

