நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்

X
மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்களில் சிறிய அளவிலான, 250 கோழிகள் கொண்ட நாட்டு கோழிப் பண்ணை அலகுகள் அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக, 10 பயனாளிகள் தேர்வு செய்து, கலெக்டரின் ஒப்புதலுடன் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கு கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவினத்தில், 50 சதவீதம் மானியமாக, 1,65,625 ரூபாய் மாநில அரசால் வழங்கப்படும். நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கு கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவினத்தில், 50 சதவீதம் மானியமாக, 1,65,625 ரூபாய் மாநில அரசால் வழங்கப்படும்.
Next Story

