தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

X
விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் தொடக்கக் கல்வித் துறையில் கண் துடைப்பாக 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு மாநிலம் முழுவதும் நிர்வாகம் மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும் மாறுதல் ஆணைகளை நாள்தோறும் வழங்கி வரும் தொடக்க கல்வித்துறை வன்மையாக கண்டித்தும், மாநில முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் பணிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறையில் வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளின் மீது விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவின்றி நடத்திட வேண்டும். 2025- 2026 ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையில் பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விதிகளின் பணி நீடிப்பு வழங்கிட வேண்டும் , உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

