ராயனூர் 50 டன் மெட்ரிக் டன்சேமிப்புக் கிடங்கில் ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றினார்.
ராயனூர் 50 டன் மெட்ரிக் டன்சேமிப்புக் கிடங்கில் ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றினார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது சேமிப்பு கிடங்கு வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துணை மேயர் காரணி சரவணன் வேளாண்மை இணை இயக்குனர் சிவானந்தம் வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குனர் நிர்மலா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story







