திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.

X
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் அமாவாசை, பௌர்ணமி, நாட்களில் கடல் உள்வாங்கியும் காணப்படும். இந்த நிலையில் இன்று ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று ஆடி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் உள்வாங்கி காணப்படுகிறது. செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை நீளத்திற்கு கடல் கரையில் இருந்து சுமார் 50 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கி காணப்படுவதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவு வெளியே தெரிகிறது. அதன் மேல் நின்று பக்தர்கள் புகைப்படம் எடுப்பது செல்பி எடுப்பது என்று ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கடல் உள்வாங்கி காணப்படும் பகுதியில் அந்த 50 அடியை தாண்டி கடலுக்குள் சென்று நீராடி வருகின்றனர். கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவ்வப்போது பக்தர்களுக்கு ஆழத்தில் சென்று நீராட வேண்டாம் என்று எச்சரித்து வருகிறார்கள்.
Next Story

