கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
X
அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் காரமடை (33), கூலித் தொழிலாளி. இவா் பணி முடிந்து வனப் பகுதியை ஒட்டியுள்ள குறுகிய மண் சாலையில் நடந்து அண்மையில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, புதரில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென தாக்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், உயிரிழந்த காரமடையின் தாய் மல்லியிடம் வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை முதன்மை வன அலுவலா் மணிமாறன் சனிக்கிழமை வழங்கினாா். வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கிடைக்கப் பெற்றதும் மீதமுள்ள ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.
Next Story