அமெரிக்காவின் 50 சதவீத வரியை ரத்து செய்ய இடதுசாரி கட்சிகள் சார்பில் கரூரில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் 50 சதவீத வரியை ரத்து செய்ய இடதுசாரி கட்சிகள் சார்பில் கரூரில் ஆர்ப்பாட்டம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இடதுசாரி கட்சிகள் சிபிஐ எம்,சி பி ஐ,சி பி ஐ எம் எல்,சார்பில் இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க அரசின் 50 சதவீத அநியாய வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கரூர் ஜவுளி ஏற்றுமதி தொழிலை நாசமாக்கும் வரி விதிப்பை கைவிடக் கோரியும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை இழப்பை தடுத்து நிறுத்திடவும், அமெரிக்காவின் அடாவடித்தனமான வரி விதிப்பை உடனடியாக டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ மாவட்ட செயலாளர் கலா ராணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் ஜோதி பாஸ்,சிறப்பு அழைப்பாளராக சிபிஐஎம் மாநில குழு உறுப்பினர் நாகை மாலி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
Next Story






