வீட்டின் பூட்டை உடைத்து 50 கிராம் தங்க நகை கொள்ளை

X
திண்டுக்கல் முருகபவனம், OC-பிள்ளை நகரை சேர்ந்த கமலசரஸ்வதி(58) என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 22-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 50 கிராம் தங்க நகையை திருடி சென்றது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்பீட்டர் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக முருகபவனம், இந்திரா நகரை சேர்ந்த சக்திவேல்(19), ரவுண்ட்ரோடு புதூரை சேர்ந்த அஜித்சுரேந்தர்(26) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

