கரூரில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

கரூரில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கரூரில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. கரூர் செஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி தனியார் பள்ளியில் நடைபெற்றது. கரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 9வயது, 11 வயது, 13 வயதுடைய சிறுவர், சிறுமியர் என பல்வேறு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் டெக்ஸ் பார்க் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து,போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுக்கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் செஸ் அகாடமியின் செயலாளர் செல்வராஜ்,மாவட்ட இணை செயலாளர் புகழேந்தி, துணைத்தலைவர் சிவக்குமார், அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டியை சிறப்பாக நடத்தினர்.
Next Story